சிங்கப்பூரில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

PIC: AFP

சிங்கப்பூரில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து உள்ளதாக கல்வி அமைச்கம் கூறியுள்ளது. COVID-19 கிருமித்தொற்று சூழலில், ஆன்லைன் கேம்கள் விளையாடும் போக்கு மோசமடைந்திருப்பதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி ஆலோசனை தேடிவரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 60% வரை உயர்ந்திருக்கக்கூடும் என ஆலோசகர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு உதவி நாடி தங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக இளையர்களுக்கு ஆலோசனை சேவை வழங்கும் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

சிங்கப்பூரில் கிருமி தொற்றால் மேலும் 3 பேர் உயிரிழப்பு – MOH

கடந்த சில ஆண்டுகளாகவே, பள்ளி மாணவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என ஸ்மார்ட்போன் மற்றும் ஆன்லைன் கேம்ஸ்களில் மூழ்கி அடிமையாகிவருவது அதிகரித்துவருகிறது. குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன்கள் கொடுத்த பின்னர், பள்ளிக்குழந்தைகளிடமும் அந்த பழக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 சூழலுக்குமுன், ஆன்லைன் கேம்கள் விளையாடும் சிறுவர்களின் எண்ணிக்கை 500ஆக இருந்தது. கொரோனா தொற்றுச் சூழலால் சிறுவர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

சிறுவர்கள் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவதால், அவர்களின் அன்றாடப் பணிகள், படிப்பு, குடும்ப உறவுகள் போன்றவை பாதிக்கப்படுகின்றன. இந்தக் கவலைக்குரிய போக்கை பெற்றோர்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“இனிமே கட்டுப்பாடு கிடையாது… தாராளமா வரலாம்” – அறிவிப்பை வெளியிட்டு அசத்திய நாடு