Work Permit அனுமதியை புதுப்பிக்கும் விண்ணப்பங்கள் குறித்து மனிதவள துணை அமைச்சர் பேச்சு!

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

சிங்கப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 1% அல்லது 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன என மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் (Gan Siow Huang) நேற்று (ஏப்.05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணைப் பணியமர்த்துவதற்கான விண்ணப்பதாரரின் தகுதியை, அவரது வருமானம், குடும்பத்தின் பராமரிப்புத் தேவைகள், பணிப்பெண்ணுக்கு முறையான, பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மனிதவள அமைச்கம் மதிப்பிடு செய்கின்றது.

நிறுத்தப்பட்டிருந்த கார் இடையில் வாலிபர் செய்த மோசமான செயல் – CCTV வீடியோவில் சிக்கிய காட்சி!

விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதில் வருமானம் மட்டுமே காரணியாக இருப்பதில்லை என்றும் இல்லப் பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துவதற்கான விண்ணப்பதாரரின் நிதித் திறனைத் தீர்மானிக்க வழக்கமான வருமானம் இல்லாத, சேமிப்பைக் கொண்ட ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் போன்ற பிற தகவல்களையும் அமைச்சகம் பரிசீலிக்கலாம் என்றும் மனிதவள துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், அதேபோல் Work Permit அனுமதியைப் புதுப்பிக்கும் விண்ணப்பங்களை மதிப்பிடுவதில், முதலாளிகள் முன்பு சம்பளம் அல்லது தீர்வை செலுத்துவதில் தவறிவிட்டார்களா என்பது போன்ற பதிவுகளையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம் எனவும், எங்களிடம் கடுமையான வருமான அளவுகோல் இல்லை எனவும் வீட்டு வருமானத்தை மட்டும் வைத்து விண்ணப்பங்களை நிராகரிக்க மாட்டோம், மாறாக அவற்றைப் பரிசீலிக்க பல காரணிகள் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் வரை Work Permit அனுமதி அட்டைகளை வைத்திருக்கும் சுமார் 2,46,300 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் வேலை செய்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வருகிறது சிங்கப்பூரின் Reebonz கட்டிடம் – ஏற்கனவே குத்தகைதாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தளங்கள்