கடந்த 2021- ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஆபரணங்கள், நவரத்தினக்கற்கள் சிங்கப்பூருக்கு அதிகளவில் ஏற்றுமதி!

Photo: Wikipedia

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கான நவரத்தினக்கற்கள் (Gems), பெட்ரோலியப் பொருட்கள் (Petroleum Products) மற்றும் ஆபரணங்களின் (Jewellery) ஏற்றுமதி கடந்த 2021- ஆம் ஆண்டு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தொடர்ந்து ‘Non- VTL’ விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட்!

கடந்த 2020- ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 282 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (US$282 Million) மதிப்புள்ள ஆபரணங்களும், நவரத்தினக்கற்களும் ஏற்றுமதியாகின. அதைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கான ஏற்றுமதி சுமார் 133 சதவீதம் அதிகரித்து, 658 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (US$658 Million) இருந்தது.

இந்தியாவின் வர்த்தக அமைச்சக புள்ளி விவரங்களின்படி (India’s Commerce Ministry figures), ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 6.9 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து (US$ 6.9 Billion), 2020- ஆம் ஆண்டு 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் (US$ 6.3 Billion) குறைந்துள்ளது. 2021- ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (US$8.2 Billion) உயர்ந்தது.

ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள் 301.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இது ஆண்டுக்கு 49.7 சதவீதம் அதிகமாகும்.

மூத்த நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கர் காலமானார்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வர்த்தக நிபுணரும், பேராசியருமான பிஸ்வாஜித் தார் ( Prof Biswajit Dhar, A trade expert from Jawaharlal Nehru University) கூறுகையில், “ஏற்றுமதிகள் அதிகரித்திருந்தாலும், நடப்பாண்டு நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.