கேலாங் கடைவீட்டில் தீ விபத்து- 30 பேர் வெளியேற்றம்!

கேலாங் கடைவீட்டில் தீ விபத்து- 30 பேர் வெளியேற்றம்!
Photo: SCDF

 

சிங்கப்பூரில் உள்ள 61 கேலாங் லோரோங்-கில் 27- ல் (61,Geylang Lorong 27) உள்ள கடைவீட்டில் ஜூலை 31- ஆம் தேதி காலை 07.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பூர் தற்காப்புக் குடிமைப் படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

‘ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கூழ் பூஜை’- பக்தர்களுக்கு அழைப்பு!

அதைத் தொடர்ந்து, 12 அவசரகால வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த 50 தீயணைப்பு வீரர்கள், மூன்றாம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையும், கூரையின் மேல் தீ கொளுந்துவிட்டு எரிந்ததையும் பார்த்தனர். பின்னர், பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துக் கொண்டு மூன்றாம் தளத்துக்கு சென்ற வீரர் நான்கு புறமும் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

சுமார் ஒரு மணி நேரமாகப் போராடித் தீயை முழுவதும் அணைத்தனர். எனினும், மூன்றாம் தளம் முழுவதும் எரிந்து நாசமானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் சுமார் 30 குடியிருப்பாளர்களை காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.