சிங்கப்பூரில் கோயிலுக்குள் நுழைந்து ஆறு சிலைகளை திருடியவருக்கு சிறை!

Singapore tamil news

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோவிட் -19 அதிரடி நடவடிக்கை காலத்தில், ஆடவர் ஒருவர் தன்னுடைய நண்பரைச் சந்தித்தார் மற்றும் பெடோக்கில் உள்ள தனது காதலியின் பிளாட்டுக்குச் சென்று முதலில் சட்டத்தை மீறினார்.

அப்போது கிருமி பரவுவதைத் தடுக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் இருந்தன.

யூதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம் – உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இளைஞர் தடுத்துவைப்பு!

பின்னர், ருத்ரா காவில் பூபாலசிங்கம் என்ற அந்த ஆடவர் கேலாங் பகுதியில் அருகிலுள்ள கோயிலுக்குள் நுழைந்து, S$4,600 மதிப்புள்ள ஆறு சிலைகளையும், மேலும் சில பிரார்த்தனை உபகரணங்களையும் திருடினார்.

இந்த குற்றங்களுக்காக, 38 வயதான சிங்கப்பூரருக்கு நேற்று (மார்ச் 10) ஒரு வருடம் மற்றும் இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் S$2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த முடியாவிட்டால் அவர் மேலும் 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு ருத்ரா திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதாக துணை அரசு வக்கீல் தெரிவித்தார்.

சமீபத்தில் தான், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருந்தது.

அதிகமான ஆபாசப் படங்களை வைத்திருந்த டெலிக்ராம் குழு அட்மினுக்கு சிறை!