கோவிட்-19 தொற்று காரணமாக மூன்று வயது சிறுமி மரணம்

Three patients died Covid19
Pic: Today/File

சிங்கப்பூரில் மூன்று வயது சிறுமி கோவிட்-19 தொற்று காரணமாக நேற்று முன்தினம் (செப்.13) உயிரிழந்தார் என்ற செய்தி இன்று வெளியாகியுள்ளது.

சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ART சோதனையில் தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டதாகவும், பின்னர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

பிழைக்க வந்த இடத்தில் வீண் வேலை – இந்தியருக்கு சிறை தண்டனை

திடீர் மாரடைப்பு மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அனாக்ஸிக் மூளைக் காயத்தால் சிறுமி இறந்தார் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பே சிறுமிக்கு பல மருத்துவ பிரச்சனைகள் இருந்துள்ளதாக MOH கூறியது.

சிங்கப்பூரில் கோவிட்-19 நோயால் இறந்த 12 வயதுக்குட்பட்ட மூன்றாவது நோயாளி இவர் ஆவார்.

போலீசை கண்டு ஓட்டம் – டேசர் துப்பாக்கியுடன் வளைத்து பிடித்த போலீசார்: சிங்கப்பூரில் வைரலாகும் வீடியோ