பள்ளி சிறுமியை மற்ற 2 சிறுமிகள் தாக்கும் வீடியோ வைரல்… போலீசில் புகார்

girls-carpark-fight

மாணவி ஒருவரை மற்ற இரண்டு சிறுமிகள் அடித்து உதைக்கும் வீடியோ பேஸ்புக்கில் பரவலாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோ முதன்முதலில் ஃபேஸ்புக் குழுவான Complaint Singapore-ல் வெளியானது, நேற்று ஜனவரி 17 அன்று வெளியான வீடியோ சுமார் 3,500க்கும் மேற்பட்ட பகிர்வுகளை பெற்றுள்ளது.

இரு பெண்களிடம் தனது பிறப்புறுப்பை காட்டிய ஆடவர்… CCTV மூலம் அதிரடியாக கைது செய்த போலீஸ்

செங்காங்கில் உள்ள பிளாக் 229 Compassvale Walk இல் உள்ள அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் அந்த சம்பவம் நடந்ததாக ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புகாரளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கோள் காட்டிய கல்வி அமைச்சின் (MOE) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வைரலான வீடியோவில் காணப்பட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பள்ளியும், தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகள் உட்பட கல்வி தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குறுகிய சாலையில் நுழைந்த கனரக லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி