சிங்கப்பூரில், ஜப்பான் பல்கலைக்கழக கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!

Global Tamil discussion in Singapore

சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் சார்பில், ஜப்பான் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஜப்பான் ரிட்சுமேகன் ஆசியா பசிபிக் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர் சக்திபாலன் பாலதண்டாயுதம் TAM, BBA., அவர்களின் ஜப்பான் நாட்டில் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி கற்க விரும்புபவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்வது, மேலும் பாடத்திட்டம், எந்தத் துறையில் சேர்ந்து படிப்பது குறித்த வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்களில் அளிக்கப்படும் சலுகைகள், வசதிகள் குறித்தும் சர்வதேச நாடுகளிலிருந்து வந்து ஜப்பான் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புபவர்களுக்கான தேவைப்படும் சூழ்நிலை, பொருளாதாரம் ஆகிவற்றை பற்றியும் விளக்க உள்ளனர்.

நிகழ்ச்சி குறித்த விவரம்:

நாள்   : புதன்கிழமை
தேதி  : 22-01-2020
நேரம் : மாலை 6.00 மணி
இடம்  : National Library, Visitors Room B1, 100 Victoria St, Singapore 188064.