சிங்கப்பூர் Gojek ஓட்டுநர்களுக்கு சேவைக் கட்டணம் 15 சதவீதமாக உயர்வு

gojek-revise-drivers-service-fee
Google Maps

வாடகை வாகனம் நிறுவனமான gojek அதன் ஓட்டுநர்களுக்கான சேவைக் கட்டணத்தை 15 சதவீதமாக அதிகரித்து மாற்றம் செய்துள்ளது.

இன்று (டிச. 19) வெளியான அறிவிப்பில், gojek அதன் ஓட்டுநர்களுக்கு இந்த சேவைக் கட்டணம் உயர்வு குறித்து தெரிவித்துள்ளது.

வாகை சூடிய அர்ஜென்டினா: 30,000 அடி உயரத்தில் வெற்றி கொண்டாட்டம்… தெருக்களில் மக்கள் வெள்ளம் – ஸ்தம்பித்த உலகம்

கோவிட் -19 தொற்றுநோய்களின் போது gojek அதன் ஓட்டுநர்களுக்கு ஆதரவாக 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதன் சேவைக் கட்டணத்தை 20 முதல் 10 சதவீதம் என்று தற்காலிகமாக குறைத்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு 2023 பிப்ரவரி 1 முதல் திருத்தப்பட்ட கட்டணம் நடப்புக்கு வரும்.

மேலும், 2023 ஜனவரி முழுவதும் ஓட்டுநர்களுக்கான சேவைக் கட்டணம் 10 சதவீதமாக இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.

நடப்புக்கு வந்ததுக்கு பிறகு குறைந்தது 12 மாதங்களுக்கு சேவைக் கட்டணம் 15 சதவீதமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி! – தமிழ் தலைவாஸ் அணி வெற்றி!