கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸில் சண்டை (வீடியோ): 4 பேரை கைது செய்தது போலீஸ்

golden-mile-complex-fight viral arrest

கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸில் (Golden Mile Complex) நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) நடந்த சண்டை அடங்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் 22 மற்றும் 25 வயதுக்குட்பட்ட நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் வங்கியில் இருந்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியுமா?

அன்று நள்ளிரவு 2:40 மணிக்கு இது தொடர்பாக புகார் கிடைத்ததாகவும், நான்கு ஆடவர்களை கைது செய்ததாகவும் போலீசார் 8 World இடம் தெரிவித்தனர்.

இதில் 22 வயதான ஆடவர் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

மேலும், அதே நேரத்தில் கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸில் நடக்கும் இன்னொரு சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது.

இதில் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்திடம் பண மோசடி… சிங்கப்பூரில் இருந்து தஞ்சை வந்த நபரை தூக்கிய போலீஸ் – மேலும் சிலருக்கு வலைவீச்சு!