சிங்கப்பூரில் 4 ஆடவர்கள் சம்பந்தப்பட்ட சண்டை காணொளி: உண்மையை வெளியிட்ட ஆடவர்!

Golden Mile Tower fight
Golden Mile Tower fight (Photo from Video)

சிங்கப்பூர் கோல்டன் மைல் டவரில் உள்ள கார் பார்க்கில் நான்கு ஆடவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சண்டை காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில், சாம்பல் நிற தலைமுடியை உடைய ஆடவர் சீன நாளேடான Lianhe Zaobaoக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றின் தற்போதைய நிலவரம்

வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட காணொளியின் முழு உண்மையையும் வெளியாகவில்லை என்று அவர் Zaobaoவிடம் கூறினார்.

சண்டையிட்ட மூன்று பேரும் குடிபோதையில் இருந்ததால் தற்காப்புக்காக செயல்பட்டதாகவும், எந்த காரணமும் இல்லாமல் அந்த மூவரும் சண்டையை தூண்டிவிட்டதாகவும் சாம்பல் நிற ஆடவர் கூறினார்.

மேலும், அந்த ஆடவர் கூறுகையில், தனது மனைவியையும் தன்னையும் மட்டுமே அந்த தருணத்தில் பாதுகாக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

“நள்ளிரவு 12 மணியில் இருந்து, நானும் என் மனைவியும் கார் பார்க்கில் இருந்து வீட்டிற்கு செல்ல முயற்சிக்கிறோம்”, என்றார்.

அவர்களில் இருவர் எங்களை ஆத்திரமூட்ட முன்வந்தனர், அவர்கள் குடிபோதையில் இருந்ததைப் போல காணப்பட்டனர். பின்னர், ஒன்றாக சேர்ந்து சண்டை தூண்டுவது போன்று செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான புகார் கிடைத்ததை தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு விதி மீறியதன் தொடர்பில் 46 பேர் மீது விசாரணை

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…