அடுத்தது சிங்கப்பூர் தான் ! – இலங்கையிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இடம் தேடி அலையும் அவலம்

Gotabaya Rajapaksa not accorded any privileges

இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்த அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மீது கடுப்பான மக்கள் தொடர்ந்து போராட்டம், அதிபர் மாளிகைக்குள் நுழைந்து கண்டனம் தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு பதவியிலிருந்து விலகுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

73 வயதான ராஜபக்சே, அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ராணுவ ஜெட் விமானத்தில் ஜூலை 13 அன்று மாலத்தீவுக்கு சென்றார்.நாட்டை திவாலாக்கிய ராஜபக்சே பதவியிலிருந்து விலகுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.தற்போது மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,அவர்களும் அனுமதியளித்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.மேலும் அதிகநாட்கள் அவர் அங்கிருக்க முடியாது என்று மாலத்தீவில் உள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாலத்தீவின் சபாநாயகர் உட்பட பெரும்பாலான கட்சிகளும் இலங்கையிலிருந்து தப்பிச் செல்வதற்கு வசதியளித்ததற்காக ஆத்திரமடைந்துள்ளனர்.புதிய அரசாங்கத்தால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச்செல்ல வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததாக வெளியான ஆதாரமற்ற ஊடக அறிக்கைகளை மறுத்துள்ளது.மேலும் ,ராஜபக்சேவின் இளைய சகோதரரும்,முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக BBC தெரிவித்துள்ளது.