சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்திற்கு பறந்த முக்கியப்புள்ளி – நாடோடியாய் வாழ்க்கையை நடத்தும் அவலம் !

gotabaya

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்திற்கு சென்றுள்ளார். குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) செய்திக்குறிப்பு நேற்று அவர் வெளியேறியதை உறுதிப்படுத்தியது.

நேற்று தாய்லாந்திற்கு வந்த அவரை தாய்லாந்து அரசாங்கம் நாட்டில் இருக்க அனுமதி அளித்துள்ளது. தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டான் பிரமுத்வினாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜபக்சேவின் தாய்லாந்து பயணத்தை இலங்கை அரசு ஆதரிப்பதாக கூறினார். மேலும் அவரது பாஸ்போர்ட் மூலம் 90 நாட்கள் வரை தங்குவதற்கு அவருக்கு உரிமை உண்டு என்றும் கூறியுள்ளார்.

மேலும் மனிதாபிமான அடிப்படையில் ராஜபக்சேவை தங்க அனுமதித்ததாகவும், அவர் தங்குவதற்கான அனுமதி தற்காலிகமானது என்றும் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா தெரிவித்தார். மேலும் இங்கு அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற பின்னர் ஜூலை 14 அன்று சிங்கப்பூர் வந்தடைந்த ராஜபக்சேவுக்கு 14 நாள் STVP வழங்கப்பட்டது, அது பின்னர் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.