இந்த லிங்க்க மட்டும் க்ளிக் செய்யாதீங்க! – உஷார்! வரிசெலுத்துவோரைக் குறிவைக்கும் இரண்டு மோசடிகள்

(Photo: TODAY)

சிங்கப்பூரில் புதுவகை மோசடிகள் நடைபெறுவதாக உள்நாட்டு வருவாய் ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.சிங்கப்பூரில் வரிசெலுத்துவோரைக் குறி வைத்து மோசடிகள் அரங்கேறுகின்றன.

வருமானத்தைத் தெரியப்படுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதும் வரியைத் திருப்பிச் செலுத்துவதாகக் கூறுவதும் இரண்டு புதிய மோசடிகளாகும்.Iras-gov.sg என்ற போலியான மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் இணைப்பை க்ளிக் செய்து வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அந்த இணைப்பு பயனர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு இட்டுச் சென்று my Tax Portal என்ற பக்கத்தில் நிறுத்துகிறது.இந்த போலியான பக்கத்தில் பயனர்களின் முழுவிவரங்களும் பெற்றுக்கொள்ளப்படுகிறது.அதாவது பயனர்களின் முழுப்பெயர்,தொலைபேசி எண்,கடன்பற்று அட்டை போன்ற தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

குறுஞ்செய்திகள் மூலம் மற்றொரு வகை மோசடி மக்களை குறி வைக்கிறது.வருமானத்தைக் கூறவில்லை அல்லது வருமானவரி ஏய்ப்பு செய்துவிட்டதாகக் கூறி பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்கள் பெறப்படுகின்றன.

இது போன்ற மோசடிகளைத் தவிர்க்க iras.gov.sg அல்லது go.gov.sg என்று உள்ள இணைப்புகளை மட்டும் க்ளிக் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வரிப்பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்ய,சிங்பாஸ் மூலம் myTax Portal தளத்திற்குள் சென்று தேவையான படிவங்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆணையம் தெரிவித்தது.