தண்டனை காலம் முடிந்தாலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வரை சிறை!

Photo: Getty

ஆபத்தான குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை முடிந்த பிறகு விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக, அவர்களால் பொதுமக்களுக்கு இனி அச்சுறுத்தல் இல்லை என்று மதிப்பிடப்படும் வரை, அவர்களை காவலில் வைப்பதற்கான முன்மொழிவுகளை சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் ஆய்வு செய்கின்றன.

இந்த முன்மொழிவின் கீழ், மிக கடுமையான காயம் மற்றும் பாலியல் ரீதியாக குற்றம் நிரூபிக்கப்பட்ட முதல் முறை மற்றும் மீண்டும் மீண்டும் குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை நிறைவேற்ற வேண்டும்.

சிலேத்தர் நார்த் லிங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த ஆடவர் – மோசமான பகுதி என நெட்டிசன்கள் காட்டம்

பின்னர் சிறைத் தண்டனை முடிந்த பிறகு அவர்கள் விடுதலை செய்வதற்கு தகுதியானவர்களா? என்பதை அதிகாரிகள் மதிப்பிட வேண்டும்.

மேலும் சிறைத் தண்டனை முடிந்த பிறகு அவர்கள் தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்டால், அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்படுவார்கள்.

ஆபத்தான குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களை சிறந்த முறையில் பாதுகாக்க இது ஒரு புதிய அணுகுமுறை என்று பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) சட்ட, உள்துறை அமைச்சர் கே.சண்முகம் விவரித்தார்.

அடுக்குமாடி ஜன்னல் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி… பதைபதைக்கும் காட்சி – கைது செய்த போலீஸ்