கிராப் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. ஊழியர்கள் அதிர்ச்சி!

Photo: Grab Company, Singapore

 

 

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் கிராப் ஹோல்டிங்ஸ் (Grab Holdings). இந்த நிறுவனம், உணவு விநியோகத்திலும் (Food Delivery), தனியார் வாடகை கார் சேவையிலும் (Taxi Services) ஈடுபட்டு வருகிறது. வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த சேவைகளை கிராப் நிறுவனம் வழங்கி வருகிறது. அதேபோல், தென்கிழக்காசியாவில் முதன்மை நிறுவனமாகத் திகழ்கிறது.

மாடி விளிம்பில் நின்ற பெண்… பத்திரமாக மீட்ட SCDF – குவியும் பாராட்டு

இந்த நிலையில், கிராப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டனி டான் (Anthony Tan) வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனத்தின் செலவினத்தைக் குறைக்கும் வகையிலும், பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டும், கிராப் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் சுமார் 1,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, அவர் எழுதிய கடிதத்தில், தொழில் போட்டி, AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சி, மூலதனச் செலவுகள், நிறுவனத்தின் மறுசீரமைப்பு உள்ளிட்டக் காரணங்களால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். நிறுவனத்தின் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் சுமார் 11% பேர் மட்டுமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, நிறுவனத்தின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சுமார் 360 ஊழியர்களை கிராப் நிறுவனம், கடந்த 2020- ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுமான ஊழியர் விளையாட்டாக செய்த செயல்… அவருக்கே வினையாய் அமைந்தது – S$3,500 அபராதம்

கிராப் நிறுவனத்தின் திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கை, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.