சிங்கப்பூர் டாலருக்கு பதிலாக ஹாங்காங் டாலரை கொடுத்து ஏமாற்றிய பயணி – மனமுடைந்த ஓட்டுனர் !

grab driver scam

சிங்கப்பூரில் கிராப் ஓட்டுநர் ஒருவர் சமீபத்தில் $8.80 சிங்கப்பூர் டாலர் கட்டணத்திற்கு பதில் $10 ஹாங்காங் டாலரை (சிங்கப்பூர் டொலரின் நிகர மதிப்பு S$1.78) ரொக்கமாக கொடுத்த பயணியால் ஏமாற்றப்பட்டார். அதாவது மொத்தம் S$8.80 டாலர் கட்டணத்திற்கு S$1.78 மட்டுமே பெற்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 8), கிராப் டிரைவரின் மகள் டிக்டோக்கில் இச்சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார், தனது தந்தை வழக்கமாக அதிகாலை 5:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி இரவு 10 மணிக்கு திரும்பி வருவார் என்றும், மதியம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேர இடைவேளை எடுத்துக் கொள்வார் என்றும் கூறினார்.

இன்று, என் தந்தை ஒரு பயணியால் மோசடி செய்யப்பட்டார் என்றும் இது நிறைய பணம் இல்லை, ஆனால் அவர் அந்த பயணியை நம்பியதால், இறுதியில் அவர் வேதனையடைந்தார் என்றும்  அவர் கூறினார்.

கிராப் சவாரிக்கான மொத்த கட்டணம் S$8.80 என்று அந்த பயணியிடம் அவர் விளக்கியுள்ளார். இருப்பினும், அந்த பயணி தன்னிடம் அந்த நேரத்தில் சிங்கப்பூர் டாலர்கள் எதுவும் இல்லை என்று கூறி HK$10ஐ கொடுத்துள்ளார். சிங்கப்பூர் டாலரில் HK$10இன் மதிப்பு எவ்வளவு என்பது அவருக்குத் தெரியாததால், கிராப் டிரைவர் பயணியிடம் தான் கொடுத்தது சரியான தொகையா என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டுள்ளார். அந்த பயணி சரியான தொகையை கொடுத்ததாக பொய் கூறி புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் கிராப் டிரைவரின் மகள் தனது வீடியோவில் பயணி தனது தந்தைக்கு கொடுத்த தொகை கிராப்பின் கமிஷனுக்கு சமம் என்றும் கூறியுள்ளார். அதாவது கிராபின் கமிசன் S$1.70 ஆகும். பின்னர் கிராப் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிச் செலுத்தி வரவு வைத்துள்ளனர்.