இனி Grab மலேசியா பயனாளர்களுக்கு செல்ஃபி சரிபார்த்தல் முறை கட்டாயம்.!

Grab மலேசியா தங்களுடைய பயனாளர்களுக்கு செல்ஃபி மூலம் சரிபார்த்தல் (verify) செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனுடன் சிங்கப்பூரர்கள் மலேசியா சென்றாலும் இந்த செல்ஃபி சரிபார்த்தல் முறை கட்டாயம், என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

உங்களுடைய மொபைலில் முகப்பு கேமரா இல்லை அல்லது பழுதடைந்து இருந்தால் உங்களுடைய மொபைலில் பின்புற கேமராவை credit மற்றும் Debit கார்டுகளை சரிபார்த்தலுக்கு பயன்படுத்த வேண்டும், என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருகின்ற ஜூலை மாதம் 12 ஆம் தேதி முதல் இந்த செல்ஃபி சரிபார்த்தல் முறை பாதுகாப்பு தேவையின் காரணமாக பயணிகளுக்கு கட்டாயம் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயனர்கள் தங்களின் செல்ஃபி சரிபார்த்தலுக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும், துணை வாகன ஓட்டிகள் மற்றும் எந்த வித வணிகஸ்தர்களுக்கும் உங்களுடைய செல்ஃபியை பகிர வேண்டாம், என்றும் அறிவுறுத்தியுள்ளது.