Saved locations ஐ பயன்படுத்தும் போது அதிக கட்டணம் வசூலிக்கபடுகிறதா ? Grab தரப்பின் விளக்கம் இதோ !

Grab saved location more fare

Grab காரை ஆர்டர் செய்யும் போது ஏற்கனவே சேமித்த இடங்களைப் பயன்படுத்துவது அதிகக் கட்டணங்களுக்கு வழிவகுக்குப்பதாக குற்றம் சாட்டி, Grab பயனாளர் ஒருவர் ஜூலை 27 அன்று TikTok இல் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ 180,000 பார்வைகளை  பெற்றுள்ளது.

பயணியான எடி, saved locationஐ Grabஇல் இலக்காகப் பயன்படுத்தும்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பகிர்ந்துள்ளார். அவர் முதலில் தனது பணி முகவரியை “வேலை” என்பதன் கீழ் சேமித்தார். saved locationஐ அவர் சேருமிடமாகப் பயன்படுத்தியபோது, JustGrab சேவைக்கான கட்டணம் S$23.80 ஆக காட்டியது. பின்னர், அவர் செல்ல வேண்டிய முகவரியை தனது saved locationஆன அலுவலத்கதிற்கு அருகிலுள்ள யூனிட்டின் முகவரியை உள்ளிட்டார். அப்போது JustGrab சேவைக்கான கட்டணம் S$16.80 ஆக காட்டியது.

ரைடர்களுக்கு அதிக வசதியை வழங்க pick-up மற்றும் drop-off இடங்களைத் தேர்ந்தெடுக்கும் அம்சம் இருப்பதாகவும், பயன்பாட்டில் உள்ள ” saved locations” அம்சத்தால் கட்டண வேறுபாடுகள் ஏற்படவில்லை என்றும் Grab தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Grab இன் அல்காரிதம் உலக Geohash அமைப்பின் அடிப்படையில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் கோடுகளைப் பின்பற்றி வரைபடத்தில் சிங்கப்பூரை பல சிறிய மண்டலங்களாக அவற்றின் விலை நிர்ணய வழிமுறை பிரிக்கிறது என்றும் பிக்-அப் இடங்கள் ஒன்றுக்கொன்று அருகில் இருக்கும் இடங்கள் இரண்டு வெவ்வேறு மண்டலங்களில் இருக்கலாம் என்றும் இதனால் வெவ்வேறு கட்டணங்கள் காட்டியிருக்கலம் என்றும் Grab கூறியுள்ளது. மேலும் இது 2018 இல் Grab மூலம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் விளக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.

எடியின் விஷயத்தில், 27 ஆன் சியாங் சாலையும் 28 ஆன் சியாங் சாலையும் வேறுபட்ட மண்டலத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.