GrabFood Delivery Man Lauded: அப்படி போடு! சற்றும் யோசிக்காமல் முதியவரை மீட்ட ஊழியர் (வீடியோ)

GrabFood Delivery Man Lauded: அப்படி போடு! சற்றும் யோசிக்காமல் முதியவரை மீட்ட ஊழியர்
GrabFood Delivery Man Rescued a Old Driver

GrabFood Delivery Man: முதியவரை விபத்தில் இருந்து காப்பற்றியதற்காக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான GrabFood ஊழியர் சிங்கப்பூரில் சமூக தளங்கள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறார்.

சிங்கப்பூரின் ஜலன் பூன் லே மற்றிம் பூன் லே வே பகுதியில், கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் வேன், லாரி இடையே விபத்து ஏற்பட்டது. இதில், வேன் சாலையிலேயே கவிழ்ந்து விழ, அதன் வயதான ஓட்டுனர் உள்ளேயே சிக்கிக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, அவ்வழியே வந்த GrabFood ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர், சற்றும் தாமதிக்காமல் கவிழ்ந்த வேனின் கண்ணாடியை ஒரே அடியில் உடைத்து, அந்த முதியவரை பத்திரமாக மீட்டார்.

இச்சம்பவம் சிலரால் ஃபோனில் பதிவு செய்யப்பட, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஊழியருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.