“வேலை செய்வது எளிதானது அல்ல, அதன் கஷ்டம் எனக்கு புரியும்” – உணவக ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்கிய உணவு விநியோக ஓட்டுநர்!

Grabfood delivery rider S$600 tips
Thai Dynasty

சிங்கப்பூரில் கிராப்ஃபுட் விநியோக ஓட்டுநர் ஒருவர் Yew Tee Squareல் உள்ள Thai Dynasty உணவகத்தில் ஊழியர்களுக்கு S$600 பணத்தை டிப்ஸாக கொடுத்துள்ளார்.

பொதுவாக விநியோக ஓட்டுநர் தான் டிப்ஸை பெறுவார், இங்கு அதற்கு நேர்மாற்றமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சிங்கப்பூரில் வாரத்துக்கு 4 நாள் வேலையா?? ஊழியர்களின் தேவை அதிகரிக்கும்.. ஆனால் சம்பளம் குறையும் என அச்சம்

இது குறித்த செய்தியை கடந்த செப்.11-ம் தேதி அந்த உணவகம் ஃபேஸ்புக் பதிவு செய்தது, அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

விநியோக ஓட்டுநர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, செப். 11, காலை 10 மணியளவில் டிப்ஸை கொடுத்து சென்றதாகத் கூறப்பட்டுள்ளது.

உணவகம், நல்ல உணவு மற்றும் சிறந்த சேவையை வழங்கியதாக குறிப்பிட்ட ஓட்டுநர், உணவக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க ஒரு குறிப்புடன் அடங்கிய பணத்தை விட்டுச்சென்றுள்ளார்.

அவர் குறிப்பில் கூறியதாவது;

“உணவின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நட்பாக பழகும் உங்களின் சேவை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் உணவு மிகவும் சுவையாக உள்ளது, அதோடு உங்களின் தாய் தேநீர் அருமையாக உள்ளது என்பதையும் நான் சொல்ல விரும்புகிறேன்.”

” ஒவ்வொரு நாளும் நான் வேலை செய்யும் போது, ​​நீங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைப்பதைப் பார்க்கிறேன், உங்கள் அனைவருக்காகவும் நான் வருந்துகிறேன்.”

“வேலை செய்வது எளிதானது அல்ல, நானும் வேலை செய்வதால் அதைப் புரிந்துகொள்கிறேன். நான் கிராப் விநியோக ஓட்டுநராக வேலை செய்கிறேன். சில சமயங்களில் நான் வேலையை முடிக்கும் போது, ​​எனக்கு ஒரு மோசமான நாளும் அமையும், அப்போது நான் உங்கள் உணவை ஆர்டர் செய்வேன், ஏனென்றால் உங்கள் உணவு ஆர்டர் எனக்கு மீண்டும் மகிழ்ச்சியைத் தருகிறது.”

“என் குடும்பம் உறுப்பினர்கள் கூட உங்கள் உணவை விரும்பி உணர்வர். எனவே, நல்ல உணவு வழங்கும் உங்களின் சேவைக்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.”

“மேலும் உங்கள் அனைவருக்கும் உதவ விரும்புகிறேன். இங்கே உங்கள் அனைவருக்கும் S$600 உள்ளது. இதை உங்களிடையே பகிர்ந்து கொள்ளுங்கள், இது உங்கள் அனைவருக்கும் உதவும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி!” என்று அதில் எழுதி இருந்தார்.

மரண தண்டனை பெற்ற 20க்கும் மேற்பட்ட குற்றாவளிகளுக்கு மாற்று தண்டனை – மலேசியா அதிரடி