பளிச்சென்று அடித்த வெயில்…நிறுத்தப்பட்டிருந்த லாரி பின்புறத்தில் மோதிய ஓட்டுனருக்கு கடும் காயம் – பதைபதைக்கும் வீடியோ

grabfood-rider-blinded-crash-lorry
via @sha_s2/TikTok and Google Maps

பளிச்சென்று தோன்றும் மதிய வெயிலில் தடுமாறிய கிராப்ஃபுட் ஓட்டுநர், மெரினா கோஸ்டல் டிரைவில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின்புறத்தில் மோதினார்.

இதில் அவருக்கு பற்கள், விரல் உடைந்ததாகவும், மேலும் காயங்கள் ஏற்பட்டு வலியால் துடித்ததாகவும் கூறப்படுகிறது.

பள்ளி சிறுமியை மற்ற 2 சிறுமிகள் தாக்கும் வீடியோ வைரல்… போலீசில் புகார்

கிராப்ஃபுட் ஓட்டுநர், தனது விபத்தின் வீடியோவை நேற்று முன்தினம் ஜனவரி 17 அன்று டிக்டாக்கில் பதிவேற்றினார்.

அவர் கூறியதாவது; “ஒரு வாரம் கடந்துவிட்டது, ஆனாலும் வலி இன்னும் இருக்கிறது..” என்று குறிப்பிட்டார்.

இந்த மோதல் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவர் தனக்கு முன்னால் இருந்த வேன் திடீரென தனது பாதையை மாற்றியதைக் கவனித்தார்.

ஆனால், ஏன் அவ்வாறு மாறியது என்பதைக் கண்டுபிடிக்க அவருக்கு போதுமான நேரம் இல்லை. அதற்குள் சட்டென்று விபத்து ஏற்பட்டது.

நலமுடன் திரும்ப அவருக்காக பிராத்தனை செய்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இரு பெண்களிடம் தனது பிறப்புறுப்பை காட்டிய ஆடவர்… CCTV மூலம் அதிரடியாக கைது செய்த போலீஸ்