சுவைக்கு பஞ்சமில்லை! – கொத்துக்கொத்தாக உற்பத்தியாகும் திராட்சையின் அளவு உள்ளங்கையை விட சிறியது!

Singapore food organisation
Pic: Getty Images

சிங்கப்பூருக்குத் தேவையான உணவுகளில் பெரும்பாலானவை அண்டை மற்றும் அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.பத்து சதவீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவுகளைப் பயன்படுத்துகிறது.

முட்டை,மீன்,காய்கறி போன்றவை உள்நாட்டு உற்பத்தியில் எளிதில் கிடைக்கக் கூடியவை ஆகும்.இவற்றுடன் திராட்சைப் பழங்களும் சிங்கப்பூரில் அதிகளவில் மகசூல் செய்யப்படுகின்றன.

சிங்கப்பூர் பண்ணைகளில் காளான் வகைகள்,கடற்பாசி போன்றவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.சிங்கப்பூரில் கொத்துக் கொத்தாக விளையும் திராட்சை வழக்கமான திராட்சையின் அளவை விட சிறியதாக இருக்கும்.ஒரு திராட்சையின் விட்டம் ஒரு சென்டிமீட்டர் கூட இருக்காது.

அதாவது திராட்சைக் கொத்தைக் கையில் பிடித்தால் உள்ளங்கையில் எளிதாக அடங்கிவிடும் அளவிற்கு சிறியதாக இருக்கும்.அளவு சிறியதாயினும் சுவையில் குறை இல்லை என்பது உண்மை.

மாறிவரும் பருவநிலையைக் கருத்தில்கொண்டு Archisen எனும் நிறுவனம் சிறிய திராட்சை வகைகளை வளர்க்கிறது. மேலும்,சிங்கப்பூரில் கடற்பாசிகளின் உற்பத்தியைப் பெருக்க 100 கடற்பாசித் தீவுகளைக் கட்ட StemCell United நிறுவனம் திட்டமிடுகிறது.

கடற்பாசியைப் பல விதங்களில் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதோடு மட்டுமின்றி அவற்றைக் கட்டுமானத்திலும் பயன்படுத்தலாம் என்று நிறுவனம் கூறியது.கடல் உணவுகள் மூலமும் சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று அது தெரிவித்தது.