சிங்கப்பூரில் ஒயினை விரும்பி குடித்த எள்ளுப்பாட்டி – சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த குழந்தை 5 தலைமுறைகளைக் கண்ட அதிசயம் !

great grandma drink french wine durian died singapore

சிங்கப்பூரில் 107 வயதான மூதாட்டி,ஜூலை 23 அன்று காலமானார்.சீனாவிலிருந்து வந்த மறைந்த சு ஜாங்யுவின் கணவர் 25 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்த தம்பதியினருக்கு 11 குழந்தைகள், 32 பேரக்குழந்தைகள், 31 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் ஐந்து எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

சீனாவின் புஜியான், ஆன்சியில் பிறந்த மூதாட்டி,தென்கிழக்கு ஆசியாவிற்கு குழந்தையாக வந்தார்.திருமணமான பின்னர் அவருக்கு இரட்டை குழந்தைகள் உட்பட 11 குழந்தைகள் பிறந்தன.அவர் சிக்கனமும் விடாமுயற்சியும் உடையவர் என்று அவரது மூத்த மகன் Zhuo Jinding, 81, கூறினார்.அவரது எல்லா குழந்தைகளையும் அவரது தாயார் வளர்த்ததாகவும் குறிப்பிட்டார்.

தற்போது புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள ஜாலான் காங் குவானில் உள்ள கம்பங்கில் குடும்பம் வசித்து வரும் நிலையில் இப்பகுதி HDB தோட்டமாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.1960 களில் இருந்து 1990 கள் வரை ஒரு பேக்கரியை நடத்தி வந்தனர்.மேலும் அவர்கள் பன்றிகளை வளர்த்தனர்.

மறைந்த மூதாட்டி தினமும் சிறிது பிரஞ்சு ஒயின் குடிக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது.துரியன் பழங்களையும் விரும்பி சாப்பிட்டு வந்தார்.அவரைப் பார்க்கச் செல்லும் குடும்ப உறுப்பினர்கள் மது அல்லது துரியன் கொண்டு செல்வார்கள்.அவரது இளைமைக் காலத்தில்,உடல் பலவீனமாக இருந்ததால் அவரது தாத்தா கொஞ்சம் மதுவைக் கொடுத்ததால் அந்த பழக்கம் ஐந்து தலைமுறையினரைக் கண்ட பின்பும் தொடர்ந்துள்ளது.