Great World ஷாப்பிங் மாலில் கடும் சண்டை… வீடியோ அதிகம் வைரலானதை அடுத்து இருவரை தூக்கியது போலீஸ்!

great-world-fight-arrested

கிரேட் வேர்ல்ட் (Great World) ஷாப்பிங் மாலில் சண்டையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக CNA தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று Kim Seng Promenadeல் இரண்டு நபர்களுக்கு இடையே நடந்த சண்டையின் வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆனது.

சிங்கப்பூரில் “வெளிநாட்டு ஊழியர்கள் சம்பாதிக்கும் S$18 க்கு அது சாத்தியமில்லை”… உதவ முன்வருமாறு அழைப்பு

இந்த சண்டை குறித்து தங்களுக்கு புகார் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், அவர்களின் அடையாளங்களை கண்டறிந்த போலீசார், கடந்த ஜூன் 6ம் தேதி அன்று அவர்களை கைது செய்தனர்.

இது குறித்த போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த சண்டையின் வீடியோவை 300,000 க்கும் அதிகமான முறை வலைதள வாசிகள் பார்த்துள்ளனர்.

பொதுமக்கள் தலையிட்ட பின்னர் இந்த சண்டை நிறுத்தப்பட்டது.

“செக்ஸ், செக்ஸ், செக்ஸ்” என்று சிறுமியை துன்புறுத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை!