கடைகளில் துணிகளை திருடுவது தான் இவர்கள் வேலை.. சிக்கிய 10 பேர்

Group of 10 arrested for allegedly stealing from shops at Orchard Road and HarbourFront
Singapore Police Force

ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் ஹார்பர்ஃப்ரண்ட் வாக் ஆகிய இடங்களில் தொடர் கடைத் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

20 முதல் 32 வயதுக்கு உட்பட்ட அவர்களில் ஏழு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவர். அவர்கள் S$6,800 மதிப்புள்ள ஆடைகளை திருடியதாக சொல்லப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் விசா இல்லாமல் வந்த வெளிநாட்டவர் – அதிகாரிகளிடம் தந்திரத்தை காட்ட முயன்று சிக்கியருக்கு சிறை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 90 க்கும் மேற்பட்ட ஆடைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

திருட்டுகள் நடந்த இடங்களை போலீசார் குறிப்பிடவில்லை, ஆனால் ஹார்பர்ஃப்ரண்ட் வாக் என்பது VivoCity ஷாப்பிங் மாலின் முகவரி.

இது குறித்து முதலில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஆர்ச்சர்ட் சாலையில் திருட்டு முயற்சி நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணைகளை மேற்கொண்ட டாங்லின் மற்றும் கிளமெண்ட்டி பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பின்னர் அந்த 10 நபர்களின் அடையாளங்களை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.

“திருடப்பட்டதாக நம்பப்படும் 90க்கும் மேற்பட்ட ஆடைகள் மீட்கப்பட்டன. 10 நபர்களால் திருடப்பட்டதாக சொல்லப்படும் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் S$6,800” என்று போலீசார் தெரிவித்தனர்.

மெரினா பே சாண்ட்ஸின் நுழைவாயிலில் மலம் கழித்த நபர் – யார் அவர்?