சிங்கப்பூரில் இனவெறி பிரச்சனை – இந்திய மற்றும் மலாய் மக்களின் கருத்து

People seen walking along Orchard Road in Singapore on Mar 29, 2022. (Photo: CNA

சிங்கப்பூரில் உள்ள அனைவரும் தங்களது இனத்தை பொருட்படுத்தாமல் பணக்காரர்களாகவோ வெற்றியாளர்களாகவோ மாற முடியும் என்று பெரும்பான்மையான மக்கள் நம்பும் அதேவேளையில் ,Racism எனப்படும் இனவெறி ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது என்று அதிக அளவில் மக்கள் தெரிவித்துள்ளனர்

இனங்களைப் பற்றிய கணக்கெடுப்பின்படி இனவெறி பிரச்சனை அதிகமாக உள்ளது என்று பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளதாக CNA மற்றும் Institute of Policy Studies நடத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் நடத்தப்பட்ட CNA-IPS கணக்கெடுப்பில் 46.3% மக்கள் இனவெறி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் (56.2%) பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இனவெறி ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பகுதியளவு மக்கள் தகுதி என்பது இனம் சார்ந்தது அல்ல என்று நம்புகின்றனர். சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அவர்கள் எந்த இனம் என்ற அடிப்படையில் இல்லாமல் அனைவரும் வெற்றியாளர்களாகவோ பணக்காரர்களாகவோ ஆகலாம் என்று நம்புகின்றனர்.இது 2016 கணக்கெடுப்புகளின் முடிவுகளுடன் ஒத்து போகின்றது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 21 வயதுக்கு மேற்பட்ட 2000 சிங்கப்பூர் குடியிருப்பாளர்களிடம் இனவெறி பற்றிய கருத்துக்கள் கேட்கப்பட்டன. அவர்களின் இன அமைப்பு மற்றும் அவர்கள் வசிக்கும் வீடுகள் சிங்கப்பூர் மக்கள் தொகையை பிரதிபலிக்கின்றன. ஆனால் 350க்கும் மேற்பட்ட மலாய் மற்றும் இந்திய மக்கள் பதிலளித்துள்ளனர்.