GST உயர்வுக்கு தீர்வே இல்லையா! – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து தெரிவித்த குடியிருப்பாளர்கள்

Singapore GST 8
Singapore GST 8

நேற்று சென்காங்கில் நடைபெற்ற பொது மக்கள் கலந்துரையாடலில் ,ஜிஎஸ்டி வரி உயர்தப்படுவதன் மூலம் வாழ்க்கைச் செலவினம் பற்றிய கவலையே அதிகம் இருந்தது.சுமார் 30 குடியிருப்பாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி காம்பஸ்வேலில் உள்ள பன்னோக்கு அரங்கில் நடைபெற்றது.

செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேம்ஸ் லிம் ,ஹி டிங் ரூ மற்றும் லூவிஸ் சுவா ஆகியோருடன் அவர்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

சிங்கப்பூரில் இந்த ஆண்டிற்கான பணவீக்கம் 5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுவதாக இம்மாதத் தொடக்கத்தில் நிபுணர்கள் கூறியிருந்தனர்.
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பதைத் தொடர்ந்து சில மாதங்களாக சிங்கப்பூரிலும் உலகநாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.இதற்க்கு முன்பாக சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் 3.6 சதவீதம் என்பதை விட அதிகமாக உள்ளது.

GST உயர்வை வெவ்வேறு வகையான பொருள்களின் அடிப்படையில் மேற்கொள்ளலாமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பலாமா என்று குடியிருப்பாளர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டார்.

எடுத்துக்காட்டாக ஆடம்பரமான பொருள்களை வாங்குபவர்களுக்கு GST ஒரு பொருட்டாக இருக்காது என்று அவர் கூறினார்.செங்காங் நகர மன்றத் தலைவர் ,குடியிருப்பாளர்களின் கருத்து தன்னுடைய கருத்துகளோடு ஒத்துப் போவதாக தெரிவித்தார்.

GST உயர்விலிருந்து உணவு,சுகாதாரப் பராமரிப்பு போன்றவற்றுக்கு விலக்குஅளிக்க வேண்டும் என்பது தமது கோரிக்கை என்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனைக் கவனத்தில் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.