சிங்கப்பூரில் Warehouse கிடங்கில் பயங்கர தீ.. 13 அவசர ஊர்திகளுடன் விரைந்து சென்றது SCDF

Gul Drive fire at warehouse
SCDF/Facebook

சிங்கப்பூரில் இன்று காலை சுமார் 8.25 மணியளவில் No. 23 Gul Drive இல் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை (SCDF) கூறியுள்ளது.

மேற்கூறிய இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து SCDF படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

40 மீட்டர் அளவுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய  கிடங்கில் தீ கொழுந்துவிட்டு எரிந்தததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தண்ணீர் மற்றும் ஜெட் கருவிகள் மூலம் தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பணிகள் நடந்து வருகின்றன.

இதில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

தீயை கட்டுப்படுத்த 13 அவசர ஊர்திகளும் சுமார் 50 தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.