சிங்கப்பூருக்கு நவம்பர் மாதம் வருகிறது Guns N’ Roses இசைக்குழு – விரைவில் முன்பதிவு தொடக்கம் !

Guns N' Roses

நவம்பர் 12, 2022 சனிக்கிழமையன்று Guns N’ Roses குழு சிங்கப்பூர் தேசிய மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஜூலை 28 ஆம் தேதி காலை 10 மணி முதல்  டிக்கெட் விற்பனை தொடங்குகிறது என்றும் ஒரெ ஒரு நிகழ்ச்சியை மட்டும் நடத்த இருப்பதாக விழா அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த இசைக்குழு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. Axl Rose, Slash மற்றும் Duff McKagan என அக்குழுவின் கலைஞர்கள் இங்கு சிங்கப்பூரில் நிகழ்ச்சி அன்று இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் புகழ்பெற்ற இந்த இசைக்குழுவின் முதல் இசை நிகழ்ச்சி பிப்ரவரி 25, 2017 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதம் வரவிருக்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் ப்ளாக்கில் வாங்குவதைத் தவிர்க்குமாரு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

டிக்கெட் பற்றிய தகவல்களுக்கு, கீழ்காணும் Linkகளை பயன்படுத்திக்கொள்ளவும்:

  • www.tegdainty.com
  • www.ghyculturemedia.com
  • www.ticketek.com.sg
  • www.sportshub.com.sg