ஏப். 23- ல் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் குருபெயர்ச்சி விழா!

Photo: Hindu Endowments Board

சிங்கப்பூரில் உள்ள 2001 லோர் 8 தோவா பயோஹ்- கில் (2001 Lor 8 Toa Payoh) அமைந்துள்ளது ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இந்த கோயிலில் வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று குருபெயர்ச்சி பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் பிரம்மோத்சவம் விழா!

இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஏப்ரல் 23- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 01.52 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியடைகிறார். காலை 08.30 மணிக்கு ஸ்ரீ நவகிரக ஹோமம், காலை 09.30 மணிக்கு ஸ்ரீ நவகிரக அபிஷேகம், காலை 10.00 மணிக்கு ஸ்ரீ குருவுக்கு சிறப்பு பன்னீர்குடம் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த பன்னீர் குட அபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம்.

காலை 11.15 மணிக்கு சிறப்பு பூஜையுடன் மஹா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் விநியோகிக்கப்படும். இரவு 07.00 மணிக்கு ஸ்ரீ குருவுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்; அதில் பக்தர்கள் பங்கேற்கலாம்.

துபாயில் இருந்து சென்னைக்கு இப்படியும் தங்கத்தைக் கடத்தி வந்த பயணி… அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி (வைரலாகும் வீடியோ)

அன்றைய தினம் இரவு 08.00 மணிக்கு சிறப்பு பூஜையும், மஹா தீபாராதனையும் காட்டப்பட்டு பிரசாதம் விநியோகிக்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.