முஸ்லிம்களை புனித ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக கூறி மோசடி – 85 பேரை ஏமாற்றியவருக்கு சிறை

haj travel package scam Man jail

முஸ்லிம்களின் புனிதத்தலமான மக்காவுக்கு பயண ஏற்பாடுகள் செய்து தருவதில் ஆடவர் ஒருவர் மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

அதாவது 85 பேர் தள்ளுபடி கட்டணத்தில் ஹஜ் பயணம் செல்ல முடியும் என்று அவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது.

இந்திய ஊழியர் விபத்தில் சிக்கி மரணம்; சிங்கப்பூரில் தொடரும் வேலையிட இறப்புகள்

இதன் விளைவாக, அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை அவரிடம் ஒப்படைப்பக்க முடிவு செய்தனர்.

அவர்களில் பெரும்பாலோர் மொத்தமாக S$97,000 க்கும் அதிகமான பணத்தையும் அவரிடம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், 62 வயதான முகமட் ராம்லீ ஏபி சமத் என்ற அவர் 20 மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகு, நேற்று வியாழன் (ஜூலை 7) அன்று அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 65 குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டன.

அவர் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த குற்றத்தை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியருக்கு குரங்கம்மை தொற்று உறுதி… நெருங்கிய தொடர்புகளுக்கு கட்டாய தனிமை