ஓ… இப்படித் தான் பாப்புலர் ஆகுறாங்களா? சிங்கப்பூர் சமூக வலைத்தள ஆளுமைகளை அம்பலப்படுத்திய ஆய்வு

சிங்கப்பூரில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பயனர்களில் செல்வாக்காக வலம் வரும் பலரும் செயற்கையாக தங்களது ஃபாலோயர்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை அதிகரிக்கச் செய்திருப்பதாக புதிய ஆய்வு முடிவு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

செயற்கையாக பின்தொடர்பவர்கள், விருப்பங்கள், கருத்துகள் மற்றும் பிற வகையான ஈடுபாடு போன்ற சமூக ஊடக மோசடிகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆன்லைன் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தணிக்கைக் கருவியான ஹைப்ஆடிட்டர் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இன்ஸ்டாகிராமில் சிங்கப்பூரில் 1.97 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருந்தது தெரியவந்திருக்கிறது.

ஹைப் ஆடிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் ஃப்ரோலோவ் கூறுகையில், சிங்கப்பூரில் 47 சதவீத செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் புள்ளிவிவரங்களை பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி செயற்கையாக அதிகரிக்கிறார்கள் – சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.