ஒருங்கிணைந்த இந்தியர்களின் குரலை முன்நிறுத்த FSIO -வை திறந்துவைத்த சிங்கப்பூர் அதிபர் யாக்கோப் – சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கான அமைப்பு

president yacob

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறையின் அமைப்பில் (SICCI),சிங்கப்பூர் இந்திய கூட்டமைப்பின் (FSIO) முறைப்படி கடந்த வாரம் கொடியேற்றினார். துவக்க விழாவை அடுத்து அதிபர் யாக்கோப் முன்னிலையில் இரவு விருந்து கோலாகலமாக நடைபெற்றது.

FSIO என்பது சிங்கப்பூரில் குடியிருக்கும் இந்தியர்களை ஒருங்கிணைப்பதற்கான 26 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாகும்.சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களுக்கு பயனளிக்கும் சமூக மற்றும் கல்வி செயல்பாடுகளை மேம்படுத்துவதையும் FSIO குறிக்கோளாக கொண்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் அறிவிக்கப்பட்டது .மேலும் தீவிலுள்ள இந்தியர்களின் கூட்டு குரலை பொது நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படும்.

இன்று ரோட்டரி இன்டர்கண்ட்ரி கமிட்டி ASEAN (RICCA) சாசனத்தில் கையெழுத்திடும் விழாவில் பங்கேற்ற சிங்கப்பூர் அதிபர் தனது பேஸ்புக் பதிவில் ”Asean உறுப்பு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இணைக்கவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் சமூகப்பணியில் புதுமைகளை உருவாக்கவும் வாய்ப்புகளை வழங்கும் ” என்று கூறினார்.

இந்தியாவும் சிங்கப்பூரும் பசுமை பொருளாதாரத்தில் ஒத்துழைக்குமாறு அதிபர் யாக்கோப் ஊக்குவித்தார் .கார்பன் உமிழ்வுகளை குறைப்பதற்கான ஒப்பந்தங்களுக்கு இரண்டு நாடுகளும் தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அதிபர், பசுமை பொருளாதாரத்தில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அதிக கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தார்.