சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப் ஜெர்மனி பயணம்; இருநாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது..!

Honorary Citizen Awards

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப் ஐந்து நாள் அரசு பயணமாக ஜெர்மனிக்கு சென்றுள்ளார், ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரின் முதல் அதிபர் இவர் ஆவார்.

அதிபர் ஹலிமா அவர்கள் முதலாவதாக தலைநகர் பெர்லின் செல்வார், அங்கு அவர் ஜெர்மன் அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் மற்றும் மூத்த அதிகாரி அங்கேலா மேர்க்கெல் ஆகியோரை சந்திப்பார்.

மேலும், அவர் பேர்லின், பிராங்பேர்ட் மற்றும் ஹைடெல்பெர்க்கில் உள்ள ஜெர்மன் நிறுவனங்களையும் பார்வையிடுவார், அத்துடன் அங்கு வசிக்கும் சிங்கப்பூரர்களை சந்திப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ஸ்டெய்ன்மேயரின் அழைப்பின் பேரில் இந்த பயணம் அமைந்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலையில் அதிபர் ஹலிமாவை, ஜெர்மனிக்கான சிங்கப்பூர் தூதர் லாரன்ஸ் பே வரவேற்றார்.

ஜெர்மன் சேம்பர்ஸ் ஆஃப் இண்டஸ்ட்ரி அண்ட் காமர்ஸ் நிறுவனத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜெர்மன் கூட்டாளிகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில், 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அதிபர் ஹலிமா கையெழுத்திடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை, அவர் ஜெர்மனியின் அதிபர், அதிகாரபூர்வ இல்லமான ஸ்க்லோஸ் பெல்லூவில் அதிபர் ஹலிமாவுக்குச் சிறப்பு விருந்தளித்துக் கௌரவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் அருகாமையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நம் சிங்கப்பூர் தமிழர்களுக்கு பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரவும்.

WhatsApp  : wa.me/6588393569

Messenger : m.me/tamilmicsetsg