கைப்பை, கைபேசியை பறித்துச் சென்ற ஆடவரை CCTV மூலம் தட்டி தூக்கிய போலீஸ்

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

டெக் வை (Teck Whye) அவென்யூ பகுதியில் நடந்த இரு தனித்தனி திருட்டு சம்பவம் தொடர்பாக 34 வயதான ஆடவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

முதல் வழக்கு

கடந்த ஜூன் 18 அன்று இரவு 8.40 மணியளவில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் தனது கைப்பையைப் பறித்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் செய்தார்.

வாடிக்கையாளர்களுக்கு இன்பச் செய்தி கூறிய “முஸ்தபா சென்டர்”

இரண்டாவது வழக்கு

அதே போல கடந்த ஜூலை 1ஆம் தேதி நள்ளிரவு 12.04 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது சகோதரரின் கைபேசியைப் பறித்துச் சென்றதாகவும் காவல்துறைக்கு புகார் வந்தது.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி கேமரா உதவியுடன், திருட்டில் ஈடுபட்ட அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து கடந்த ஜூலை 1 அன்று கைது செய்தனர்.

அதன் பின்னர் அந்த ஆடவர் கடந்த சனிக்கிழமை (ஜூலை 2) அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இந்த குற்றத்திற்காக ஒன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.

கட்டுமான ஊழியர்கள் அதிகம் இறப்பு… வேலையிட விபத்துகளுக்கு இதான் காரணம் – ஊழியர்கள் நச் பதில்!