சிங்கப்பூரில் களைகட்டிய முயல் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

Photo: Changi Airport Official Facebook Page

சீனாவில் 2023- ஆம் ஆண்டுக்கான வசந்த காலம் ஆடல், பாடலுடன் உற்சாகமாகத் தொடங்கியது. சீனாவில் முயல் புத்தாண்டு அந்நாட்டு நேரப்படி, சனிக்கிழமை இரவு 08.00 PM மணிக்கு பிறந்தது. இதையொட்டி, வசந்தக் காலத்தை வரவேற்கும் விதமாக, சீனா முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மூன்று ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கத்தால் வீடுகளிலே முடங்கியிருந்த பொதுமக்கள் மீண்டும் உற்சாகத்துடன் முயல் புத்தாண்டை வரவேற்றனர்.

தைப்பூசம்: ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு!

சிங்கப்பூரிலும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டின. முயல் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, பேருந்துகள், ரயில்களில் வண்ணமிகு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தனர். சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் முயல் பொம்மையைக் கொண்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.

முயல் புத்தாண்டையொட்டி, சிங்கப்பூரில் உள்ள பூங்காக்கள், உணவகங்கள், மால்கள், கடைவீதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதேபோல், சிங்கப்பூரர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு விளக்கம் அளித்த ஸ்கூட் நிறுவனம்!

இதனிடையே, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு சீன புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.