சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பில் முதல்முறையாக ஆப்பிரிக்க-சிங்கப்பூர் மனிதர் – நன்றியுடன் இருப்பேன்!

hartley-humphrey-muze-serve-ns
சிங்கப்பூரின் 57வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேசியதின அணிவகுப்புக்காக சிங்கப்பூரர்கள் காத்திருக்கிறார்கள்.
57வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு அணிவகுப்பு மற்றும் விழாப் பிரிவில் பங்கேற்கும் 37 மெய்நிகர் மற்றும் உடல் அணிவகுப்புக் குழுவில் 2,000 வீர்கள் பங்கேற்கின்றனர்.இவர்களில் 25 வயதான Hartley Humphrey Muze-ம் ஒருவராவார்.இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஆப்பிரிக்கர்.

 

இந்தாண்டு அணிவகுப்பு அனைத்து தேசிய சேவையாளர்களின் சேவை மற்றும் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சலி செலுத்தும்.”Tribute to NS55″ அணிவகுப்பு வீடியோவில் NSF 3SG ஹார்ட்லி முஸ், முதல் முறையாக NDP இல் அணிவகுத்து நிற்கிறார்.ஹார்ட்லி முஸ் முதல் ஆப்பிரிக்க-சிங்கப்பூர் நபர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.