தற்போதைய புகைமூட்டம் பற்றி தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு கூறுவது என்ன?

Haze to worsen further in Singapore as 24-hour PSI may hit 150

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகையில், காற்று சுமத்ராவிலிருந்து சிங்கப்பூர் வரை அதிக புகை மூட்டத்தை ஏற்படுத்தியுள்ளது, என்று விளக்கம் அளித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 24 மணிநேர PSI குறியீடு 107 முதல் 124 வரை தீவு முழுவதும் பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளைக் காட்டிலும், மேற்கு, தெற்குப் பகுதிகளில் புகைமூட்டம் சற்று கூடுதலாக உள்ளது.

காலை 8 மணி நிலவரப்படி 1 மணிநேர PM2.5 குறியீடு மத்தியப் பகுதியில் 37யை எட்டியது.

மேலும், நிலவி வரும் காற்று தென்கிழக்கு அல்லது தென்-தென்மேற்கு திசைகளில் இருந்து தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நாள் முழுவதும் அதிக புகைமூட்டம் இருக்கும்.

இதுபோன்ற ஆரோக்கியமற்ற நிலையில் காற்று இருக்கும்போது இதய நோய், நுரையீரல் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களும், மேலும் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தேசியச் சுற்றுச்சூழல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.