HDB குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் நாய்களை தத்தெடுக்க திட்டங்கள்.

dog

சிங்கப்பூர் ஸ்பெஷல்ஸ் மற்றும் K9 மோப்ப நாய்கள் HDB பிளாட்களில் வசிக்கும் மக்களுக்கு அவைகளைத் தத்தெடுக்க தொடர்ந்து கிடைக்கும். கலப்பின நாய்களை HDB குடியிருப்புகளில் வளர்க்கலாம் என்று விலங்கு மற்றும் கால்நடை சேவை AVS இன் திட்டமான ADORE இல் விரிவாக்கப்பட்ட தத்தெடுப்பு அளவுகோலின் கீழ் கூறப்பட்டுள்ளது.

 

சிங்கப்பூர் ஸ்பெஷல்ஸ் எனப்படும் உள்ளூர் குறுக்கு இன நாய் வகைகளை HDB குடியிருப்பாளர்கள் வைத்துக்கொள்ள, இந்தத் திட்டம் அனுமதி அளிக்கிறது. ஜூன் 18, பிஷன்-ஆங் மோ கியோ பூங்காவில் நடைபெற்ற AVS இன் செல்லப்பிராணிகள் தின விழாவில் இச்செய்தி அறிவிக்கப்பட்டது. தெருநாய்களை மீட்டெடுப்பதற்கான விரிவாக்கப்பட்ட அளவுகோல்கள் மற்றும் project ADOREன் கீழ் K9 மோப்ப நாய்களை பொதுமக்கள் தத்தெடுக்கும் திட்டம் நிரந்தரமாக்கப்படும் என்றும் AnimalBuzzSG (AVS) இன் முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது.

அளவுகோலில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள்
உயரம்       –50 முதல் 55 cm வரை
எடையில் முன்பிருந்த 15kg என்ற கட்டுபாடு நீக்கம்,

 

Project ADORE – Project on ADOption and REhoming of dogs.

இத்திட்டம் 2012ல் ஆரம்பிக்கப்பட்டு, தேசிய வளர்ச்சி அமைச்சகம், HDB மற்றும் AVS ஆல் ஆதரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 2,000க்கும் அதிகமான கலப்பின நாய்கள் HDB அடுக்குமாடி குடியிருப்புகளில் தத்தெடுக்கப்பட்டுள்ளன.