சிங்கப்பூர் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – செப்டம்பர் வரை இதை நிலை தொடரும் அபாயம்!

singapore
(Photo: Unsplash)

சிங்கப்பூர் அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது.

அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் இங்கு வானம் மங்கலாக மூட்டத்துடன் காணப்படும்.

தற்போது அதிக வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்­மாத இறு­தி­வரை வெயில் கொளுத்­தும் என்­றும் செப்­டம்­பர் மாதம்­வரை வறண்ட வானிலை நீடிக்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத­னால், வெப்­பம் சார்ந்த உடல்­ந­லக் கோளா­று­கள் ஏற்­ப­ட­லாம் என்­ப­தால் பொது­மக்­கள் கவ­ன­மாக இருக்­கும்­படி மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்­து­கின்­ற­னர்.

வெப்­பத்­தால் ஏற்­படும் தடிப்பு, தசை­வலி, சோர்வு, சொறி, கடும் வெப்­பத்­தா­லும் நீர்ச்­சத்­துக் குறை­வா­லும் ஏற்­ப­டக்­கூ­டிய சொறி, படை போன்­ற­வற்­றால் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­டு­வ­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

வெளிப்­பு­றங்­களில் வேலை செய்­வோர் தலை­வலி, உடற்­சோர்வு, உடல்­வலி, தலைச்­சுற்­றல், கவ­னக்­கு­றைவு போன்­ற­வற்­றால் பாதிக்­கப்­பட அதிக வாய்ப்­புள்­ளது.

இவ்­வாண்டு ஏப்­ரல், மே மாதங்­களில் வெப்­ப­நிலை உச்ச அள­வில் பதி­வா­னது. வெப்­பத்தின் தாக்­கத்­தைத் தவிர்க்க: தளர்­வான, மெல்­லிய, ஈரம் உறிஞ்­சும் ஆடை­க­ளை­யும் தொப்­பி­யை­யும் அணியலாம்.

காலை 9 மணி­யில் இருந்து பிற்­பகல் 4 மணி­வரை வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளைத் தவிர்க்­க­லாம்.

நாளொன்­றுக்­குக் குறைந்­தது இரண்டு லிட்­டர் நீர் அருந்­துங்­கள். முடிந்த அள­விற்­குச் சூடான உணவு­க­ளை­யும் பானங்­க­ளை­யும் தவிர்க்­க­லாம்.

அதே­போல, அதி­கச் சர்க்­க­ரை­யும் மது அளவும் அதிகம் உள்ள பானங்­க­ளைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.