2 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் மீண்டும் திறப்பு – போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட முடிவு

reopening singapore malaysia border after two years traffic

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையேயான எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால் ,தென் மாநிலத்தின் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று Johor முதல்வர் Onn Hafiz Ghazi புதன்கிழமை தெரிவித்தார். மேலும் இரண்டு குடியேற்ற வளாகங்களிலும் அனைத்து கவுன்டர்களும் திறந்திருக்கும் என்றும் 100% திறனுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Woodland Causeway -ல் உள்ள Bangunan Sultan Iskandar மற்றும் Tuas Second Link-ல் உள்ள Kompleks Sultan Abu போன்றவற்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசினார். முதல்வர் எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால் ஏற்படவிருக்கும் போக்குவரத்து நெரிசல் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார்.

“எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின் எல்லாமே சுமூகமாக நடப்பதை உறுதி செய்ய நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் செய்திருந்தாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூரர்கள் ,மலேசியர்கள் மற்றும் ஜொகோரியர்கள் என எல்லையில் பயணம் செய்யும் மக்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் ” என்று முதல்வர் Onn Hafiz கூறினார்.

ஏப்ரல் 1ஆம் தேதி எல்லை திறக்கப்படுவதால் வாகனங்கள் அதிக அளவில் வந்து சேரும். எனவே மக்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். முடிந்தால் பயணிகள் Johor-க்கு வருவதை தாமத படுத்திக்கொள்ளுங்கள் ” என்று அறிவுறுத்தினார். ஏப்ரல் 1 முதல் 7-ஆம் தேதி வரை ,இதேபோன்ற பயணத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று Johor அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

மலேசியாவின் பிரதமர் Yaakob, வாகன நெரிசலை தவிர்க்க Causeway மற்றும் Second Link குடியேற்ற வளாகங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் எல்லைகள் மூடப் பட்டிருப்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Dr.Wee தெரிவித்தார்.