போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் – இம்மாத இறுதி வரை நீடிக்கும்.

heavy traffic

278,000 பயணிகள் ஜூன் 17 அன்று வார இறுதியில் சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளைக் கடந்துள்ளார்கள், மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இம்மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாத விடுமுறையின் தொடக்கத்திலிருந்தே, உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. ஜூன் 17 முதல் 19 வரையிலான சமீபத்திய வார இறுதியில், இரண்டு சோதனைச் சாவடிகளும் ஒரு நாளைக்கு சுமார் 278,000 பயணிகளை சந்தித்தது. இது ஜூன் 10 முதல் 12 வரையிலான முந்தைய வார இறுதியில் ஒரு நாளைக்கு சந்தித்த பயணிகளின் எண்ணிக்கையான 267,000ஐ விட அதிகமாகும். தற்போது வெசக் தினம் (224,000/நாளில்) மற்றும் புனித வெள்ளி (149,000/நாளில்) வார இறுதி நாட்களை விடவும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த காலகட்டத்தில், கால தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்றும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்காமல் இருக்க பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை சரிசெய்யுமாரும் ICA அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில், மலேசியாவிற்குச் செல்லும் அல்லது மலேசியாவில் இருந்து வரும் கார்கள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகளில் பல பயணிகள் நெரிசல் மிகுந்த சோதனைச் சாவடிகளில் பல மணி நேரம் சிக்கித் தவித்துள்ளனர்.

 

கீழ்காணும் பரபரப்பான நேரங்கள்(PEAK HOURS) ஐத் தவிர்க்குமாறு ICA பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் போது தவிர்க்க வேண்டிய நேரங்கள்:-

  • சனிக்கிழமை – (ஜூன் 25) 06.00 மணி முதல் 09.00 மணி வரை & 21.00 மணி முதல்
    23.59 மணி வரை
  • ஞாயிறு (ஜூன் 26) – 06.00 மணி முதல் 08.00 மணி வரை

சிங்கப்பூருக்கு வருகை தர தவிர்க்க வேண்டிய நேரங்கள்:-

  • ஜூன் 24 வரை வார நாட்கள் அனைத்திலும் – 22.00 முதல் 23.59 மணி வரை
  • சனிக்கிழமை (ஜூன் 25) – 21.00 மணி முதல் 23.59 மணி வரை
  • ஞாயிறு (ஜூன் 26) – 18.00 மணி முதல் 23.59 மணி வரை