நம்பிக்கை வலுப்பெறும் ! – சிங்கப்பூரில் முதல் ஹெலிகாப்டர் இதுதான்;சமையல் எண்ணெயில் இயங்குமா?

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய விமான எரிபொருள் மூலம் இயங்கும் முதல் ஹெலிகாப்டர் சிங்கப்பூரில் அதன் போக்குவரத்து சேவையைத் தொடங்கியுள்ளது.வாடிக்கையாளர்களுக்கான பயணங்களுக்கு பசுமையான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

Bell என்னும் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்பு,விமான எரிபொருள் மற்றும் உபயோகிக்கப்பட்ட சமையல் எண்ணெய் போன்றவற்றின் கலவையில் இந்த ஹெலிகாப்டர் இயங்குகிறது.

பசுமையான எரிபொருளைப் பயன்படுத்துவதால் ஹெலிகாப்டரின் செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று அதை இயக்கிய விமானி தெரிவித்துள்ளார்.பசுமையான கலவை எரிபொருளை Neste என்னும் நிறுவனம் விநியோகிக்கிறது.

பசுமையான எரிபொருளில் இயங்கும் ஹெலிகாப்டரில் சோதனைப் பயணங்களை மேற்கொள்வது அந்தச் சேவையின் மீதான பாதுகாப்பு,செயல்பாடு குறித்த நம்பிக்கையை அதிகரிக்கும்.

சிங்கப்பூரில் நீடித்த விமானப் போக்குவரத்து சேவையின் இலக்குகளை எட்டுவதற்கு,அனைத்துலக வல்லுனர்கள் அடங்கிய அதன் குழு அதன் பரிந்துரைகளை முன்வைத்தது.இதனையடுத்து,பசுமை எரிபொருளில் இயங்கும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கியுள்ளது.