டாக்ஸி பயணிகளுக்கு தமிழ் ஊழியர் செய்த உதவி… “மற்றவர்களுக்கு உதவுவதில் தமிழனை அடிச்சிக்க முடியாது” – குவியும் பாராட்டு

Stomp

டாக்ஸியில் தங்களுடைய லக்கேஜ் உடமைகளை விட்டுச் சென்ற பயணிகளுக்கு டாக்ஸி ஓட்டுநர் மற்றும் வெளிநாட்டுத் ஊழியர் உதவி செய்யும் இந்தக் காணொளி அனைவராலும் பாராட்டப்படுகிறது.

Berseh Food Centre அருகிலுள்ள டெஸ்கர் சாலையில் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 13) நடந்த இந்த சம்பவம் டாஷ்கேம் கேமராவில் பதிவானது.

லாரி மோதியதில் ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

அந்த வீடியோவில், வயதான முதியவர் ஒருவரும் பெண்மணி ஒருவரும் ComfortDelGro டாக்ஸியில் இருந்து இறங்குவதைக் காணலாம். அப்போது அவர்கள் மறதியில் தங்கள் உடமைகளை வாகனத்தில் விட்டுவிட்டு செல்கின்றனர்.

பின்னர், இது பற்ற அறிந்த டாக்ஸி ஓட்டுநர் அவர்களை அழைக்க கை சைகை செய்வதைக் காணலாம். அப்போது, அந்த வழியாகச் சென்ற தமிழ் ஊழியர் அவர்களை அழைக்க பின்தொடர்ந்து செல்வதை காண முடிந்தது.

அதன் பின்னர் பெண் பயணி டாக்ஸி பூட்டில் இருந்து உடமைகளை எடுக்க திரும்பி வருவதைக் காணலாம், அதே நேரத்தில் முதியவர் ஓட்டுனருக்கு நன்றி சொல்கிறார்.

டாக்ஸி ஓட்டுநர், உதவி செய்த ஊழியருக்கு தம்ஸ்-அப் சைகையை செய்வதையும் காணலாம்.

இந்த காலத்தில் நேர்மையான, உதவி குணம் கொண்ட மனிதர்களை பார்ப்பது அரிதாக உள்ள சூழலில் இது போன்ற உதவிகள் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இவர்களால் தான் சிங்கப்பூர் அழகாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. – Video

உணவகத்தின் உள்ளே பாட்டிலில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு உதவி செய்யும் பெண்… “இதான் ஒழுக்கமா?” – நெட்டிசன்கள் காட்டம்