வேலை உறுதி! – சிங்கப்பூரில் புதிதாக 13,000க்கும் மேற்பட்ட வேலைகள்;வேலை யாருக்கு?

(Photo: TODAY)

சிங்கப்பூரில் குறைந்தபட்சம் 13,400 புதிய வேலைகளை உருவாக்குவதற்கு வழிவகை செய்ய ஐந்து உற்பத்தித்துறைகள்,வர்தகக்குழுமங்கள் ஆகியவற்றுக்கான தொழில்துறை திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியத் நேற்று அந்த தொழில்துறை உருமாற்றத்திட்டங்களை வெளியிட்டார்.

‘இன்டஸ்ட்ரியல் டிரான்ஸ்பர்மேஷன் ஆசிய-பசிபிக் 2022’ என்ற தொழில்துறை உருமாற்ற நிகழ்ச்சியின் தொடக்கவிழா சிங்கப்பூர் மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற திரு.ஹெங் திட்டங்களை வெளியிட்டார்.

தொழில்துறை உருமாற்றத் திட்டங்கள் ஆய்வு,பெரிய அளவிலான மின்னிலக்கமயமாதல் நடவடிக்கைகள்,மின்சாரப் பொருள்களின் தொடர்பிலான நீடித்த நிலைத் தன்மை அம்சம்,எரிசக்தி மற்றும் ரசாயனம்,தளவாடத்துறை,ஆகாய வெளித்துறை ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்கும்.

இந்தத் துறைகள் சிங்கப்பூரின் உற்பத்தி வெளியீட்டில் வருடந்தோறும் சுமார் 80 சதவீதம் பங்கு வகிப்பதாக பொருளாதார வளர்சிக் கழகம் தெரிவித்தது.

சர்வதேச நிறுவனங்கள்,உயர் கல்வி நிலையங்கள் ஆகியவற்றுடன் கூட்டாளித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டு சர்வதேச வர்த்தக வாய்ப்புகளைப் பெறும் திறனை வளர்த்துக்கொள்ளவும் சிறிய நிறுவனங்களுக்கு உதவுவதும் இந்த உருமாற்றத் திட்டங்களின் இலக்காகும்.