சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீயட், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சந்தித்தார்..!

Heng Meet up Modi

சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கியமான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பரந்த அடிப்படையிலான உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், பல்வேறு துறைகளில் அடிக்கடி உயர் மட்ட பரிமாற்றங்கள் மற்றும் வலுவான ஒத்துழைப்பைக் காண்பது குறித்தும் விவாதித்தனர்.

உள்கட்டமைப்பு, ஃபின்டெக், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, அத்துடன் சுற்றுலா உள்ளிட்ட எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளை குறித்து அவர்கள் கலந்துரையாடினர். சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் கணிசமான உறவு வலிமையாக வளரும் என்று நம்புவதாக ஹெங் கூறினார்.

அதனை தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் சக இணைத் தலைவராக இருக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் ஹெங் சந்தித்தார்.

இருநாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இணைப்பை வலுப்படுத்துதல் போன்ற ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து அங்கு விவாதித்தனர். மேலும், தொடர்ந்து வெவ்வேறு பலங்களை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் பரஸ்பர நன்மையையும், செழிப்பையும் நம் மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்றும் துணை பிரதமர் ஹெங் கூறினார்.