இந்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீயட் சந்தித்தார்!

Heng Swee Keat Met Minister of Finance and Minister of Corporate Affairs, Nirmala Sitharaman, and Minister of Railways and Minister of Commerce and Industry, Piyush Goyal.

கடந்த அக்டோபர் 2 மகாத்மா காந்தியின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீயட், மகாத்மா காந்தியின் நினைவுச்சின்னம் அமைந்துள்ள டெல்லி ராஜ்காட்டில் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, நிதி அமைச்சரும் கார்ப்பரேட் விவகார அமைச்சருமான நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே அமைச்சர் மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை ஹெங் ஸ்வீ கீயட் சந்தித்து கலந்துரையாடினார்.

சிங்கப்பூர் இந்தியாவுடன் பரந்த அடிப்படையிலான, பன்முக இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் வர்த்தக வசதி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பதை குறித்து விவாதித்தனர்.

இருநாட்டு உறவுகளையும், நாட்டு மக்களின் உறவையும் வலுப்படுத்த எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று ஹெங் ஸ்வீ கீயட் கூறினார்.