பூங்காவில் மரக்கன்றை நட்டு வைத்த இந்திய தூதர்!

Photo: High Commission Of India In Singapore Official Facebook Page

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 75- வது சுதந்திர தின அமுத பெருவிழாவை (Azadi Ka Amrit Mahotsav) இந்திய அரசு, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

’15 வயது சீன பெண்ணை காணவில்லை’- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

மேலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரங்கள், இந்தியர்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து அமுத பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

Photo: High Commission Of India In Singapore Official Facebook Page

அமுத பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரகம், கிழக்கு கடற்கரை பூங்காவில் (East Coast Park) மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில், அக்டோபர் 28- ஆம் தேதி அன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் குமரன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மேயர் ஃபஹ்மி அலிமான் (Fahmi Aliman) கலந்துக் கொண்டார்.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது?- விரிவான தகவல்!

பின்னர், இந்திய தூதர், மேயர் உள்ளிட்டோர் இணைந்து மரக்கன்றை நட்டு வைத்தனர். பின்னர், அவற்றுக்கு தண்ணீர் ஊற்றினர். இந்த நிகழ்ச்சியில், இந்திய தூதரக அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பூங்கா நிர்வாகத்தினர், தேசிய பூங்கா நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.