பயங்கரவாத எதிர்ப்பு தினத்தையொட்டி, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

கடந்த 1989- ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் மறைவையடுத்து, அவரது மகன்களின் ஒருவரான ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், கடந்த 1991- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி, தமிழகத்திலும் பிரச்சாரம் செய்தார்.

இந்தியா, சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் விவரங்கள்!

அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த ராஜீவ்காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி, உடல் சிதறி மரணமடைந்தார். இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்நிலையில், நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மே 21- ஆம் அன்று தேசிய பயங்கரவாத தினமாக (National Anti-terrorism day) அனுசரிக்கப்படும்; இந்த நாளில் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தது.

அந்த வகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31- வது நினைவு தினம் இன்று (21/05/2022) அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.

எட்டு இடங்களில் ERP கட்டணங்கள் 19 நேரங்களில் படிப்படியாக உயரும் – முழு விவரம்

அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலுவலகங்களில் அரசு உயரதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் இன்று (21/05/2022) பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் குமரன் பெரியசாமி தலைமையில் தூதரகத்தின் அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.